உச்ச நடிகையின் முடிவால் கோபமான சீனியர் நடிகர் !
முன்னணி நடிகைகளில் ஒருவரான அந்த நம்பர் 1 நடிகை பிரபல ஹீரோக்கள் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர். ஒவ்வொரு படம் முடிந்தபிறகும் அதை ரசிகர்களிடம் பிரபலப்படுத்த புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தான் நடிக்கும் எந்த படத்துக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற பாலிசியை வைத்திருக்கிறார் நடிகை. அவர் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது படத்தில் நடிக்கும் ஹீரோ இன்னும் பிற நட்சத்திரங்கள் மட்டுமே புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.தற்சமயம் தெலுங்கு சீனியர் நடிகர் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார் நடிகை. நடிகரின் மகன் படத்தை தயாரிக்கிறார். ஒப்பந்தம் செய்யும்போதே பல கோடி செலவில் இப்படம் தயாரிக்கப்படுவதால் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும என்று நடிகையிடம் கேட்டுக்கொள்ள அவரும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கலந்து கொள்வதாக கூறினாராம். படம் முடிந்து அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் வேலைகளில் தயாரிப்பாளர் ஈடுபட்டிருக்கிறார். நிகழ்ச்சியில் நடிகையை பங்கேற்பதற்கு உறுதி செய்ய, பலமுறை போனில் அழைத்தும் சரியான பதில் இல்லையாம். இது சீனியர் நடிகருக்கும், மகனுக்கும் தெரியவர அவர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம். நடிகை தரப்பில் கேட்டால், ‘படங்கள் அதன் கதையை பொருத்தே வெற்றி பெறுகிறது. புரமோஷனை பொறுத்து அல்ல’ என கூலாக பதில் சொல்கிறாராம்.