அட்லீக்கு ரெட் கார்டு அறிவித்தது கோலிவுட் தயாரிப்பாளர் சங்கம் !

இயக்குனர் அட்லி இயக்கிய முதல் திரைப்படமான ’ராஜா ராணி’ திரைப்படம் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்த திரைப்படமாகும். அதன் பின்னர் அவர் இயக்கிய ’தெறி’ மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற போதிலும் வசூல் ரீதியில் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது. மெர்சல்’ படத்தை தயாரித்த நிறுவனம் இன்றளவும் மீள முடியாமல் உள்ளது என்று கூறப்படுகிறது. அதேபோல் தற்போது அவர் இயக்கி வரும் ’பிகில்’ திரைப்படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி என்று அவர் தயாரிப்பு தரப்பினர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது அந்த படத்தின் பட்ஜெட் ரூ1850 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அட்லீ வாக்களித்த பட்ஜெட்டில் படம் தயாரித்ததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், இனிமேல் அவருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்றும் இரகசிய ரெட்கார்ட் போட்டுள்ளதாக செய்தி கசிந்து வருகின்றது.