Cine Bits
காப்பானைக் கைப்பற்றிய சன் டிவி
பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. அயன் மற்றும் மாற்றான் படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 31, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ள நிலையில் தெலுங்கு பதிப்புக்கு பந்தோபஸ்த் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் த்ரில்லராக வெளியாக இருக்கும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டி வி ஒரு பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது.