மீண்டும் திரையில் ஜொலிக்க காத்திருக்கிறார் ஷெரின் !

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “துள்ளுவதோ இளமை” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின் அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.சரியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து, பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின் செம்ம ஸ்லீம்மாக க்யூட்டாக காட்சியளித்தார். ஷெரின் ரசிகர்களுக்கு மீண்டும் அவர் திரையில் ஜொலிப்பார் என்கிற நம்பிக்கை வந்துள்ளது.