‘விவேகம்’ படப்பிடிப்பில் காஜல் இணைகிறார்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் உலக தரத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பின் இரண்டு ஸ்டில்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது .

இப்படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இன்னும் ஒருசில நாட்களில் பல்கேரியாவில் படக்குழுவினர்களுடன் இணைவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கடைசி இருபது நாட்கள் அஜித், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது  

ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'விவேகம்' படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூலை மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.