அஜித்தின் பலம் ஆளுமைதிறன்,எளிமை – வித்யா பாலன் பாராட்டு !

வித்யா பாலன் தமிழில் தயாராகும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமாருடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷப்பட்டேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும். எனக்கு பாடல் காட்சியும் உள்ளது. படப்பிடிப்பில் அஜித்குமாரின் ஆளுமை திறன் என்னை கவர்ந்தது. பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தனக்கு பின்னால் வைத்திருக்கும் ஒருவர் என் பக்கத்தில் நிற்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. எல்லோருடனும் மிகவும் எளிமையாக பழகினார். பெண்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் அழுத்தமான கதையம்சத்தில் படம் உருவாகி உள்ளது. இந்த கதையை அஜித்குமார் போன்ற பெரிய நடிகரால்தான் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும். தல இமேஜ் பற்றி அவரிடம் நான் பேசியபோது கூச்சப்பட்டார் இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.