Cine Bits
பெண்களை பெருமைகொள்ளச்செய்யும் பீகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல்
டிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ‘பிகில்’. ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மெர்சல், சர்கார், படத்தைத் தொடர்ந்து விஜய்யின் இந்தப் படத்திற்கும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து 23-ம் தேதி பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சிங்கப் பெண்ணே’ பாடல் வெளியாகும் என நேரம் குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டது. பெண்களின் பெருமைகளைப் போற்றும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாஷா திருப்பதி குரலில் அமைந்திருக்கும் இப்பாடலை ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.