Cine Bits
இயக்குனராக அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் !
கடந்த சில வருடங்களாக சச்சின் தோனி முதல் பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இன்னொரு பிரபலமான இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இயக்குனராகிறார். மேலும் இளையராஜா கேரக்டரில் நடிக்க பல நடிகர்களை தான் பரிசீலனை செய்ததாகவும் கடைசியில் தனுஷ் தான் அந்த வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். யுவன் இதனை கூறும்போது தனுஷ் அருகில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இயக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படம் குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.