விவசாயி என்றாலே வயதானவர்கள் என்ற நிலைமை மாறவேண்டும் – கார்த்தி வேண்டுகோள் !
ஒவ்வொரு பொங்கல் தினத்தின்போதும் நடிகர் கார்த்தி தனது குடும்பத்தினர்களுடன் சொந்த ஊருக்கு சென்று சொந்தபந்தங்களுடன் பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்றும் பொங்கல் விழாவை கொண்டாடிய கார்த்தி, காளிங்கராயன் கால்வாயில் முளைப்பாரியை விட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பேசியதாவது, விவசாயி என்றாலே வயதானவர்கள் என்ற நிலைமை உருவாகியுள்ளது. அப்படி இருக்கவே கூடாது. இனி விவசாயத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். பெரியவர்கள் நம்மிடம் இந்த விவசாயத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.என் மகள் என்னுடன் இந்த கால்வாயில் முளைப்பாரியை விட்டார். பொங்கல் பண்டிகைக் காலங்களில் நான் ஊருக்கு வருவதற்கு இதுபோன்ற பழக்கங்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான். எவ்வளவு சம்பாதித்தாலும் விவசாயத்தை விட்டுவிடக் கூடாது. நான் சென்னைக்கு அருகிலேயே விவசாயம் செய்வதற்காக இடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.