Cine Bits
நடிப்பில் தான் வில்லன் ஆனா நிஜத்தில் ஹீரோ !
திரைப்படத்தில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்வில் ஹீரோக்களாக வலம்வருபவர்கள் நிறையபேர். அவர்களில் ஒருவர் தான் ராஜசிம்மன். 1995-ல் ராஜா எங்க ராஜா படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் இவர். அப்படத்திற்கு பிறகு என்னை அறிந்தால், கொம்பன், நண்பேண்டா, கடம்பன் ஆகிய படங்களில் தனது நடிப்பால் மிரட்டியிருப்பார். இவர் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய சொந்த செலவில் தினமும் 100 பேருக்கு உணவளித்துவருகிறார். கோடிகளில் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் ஏதோ சிறு உதவியை செய்துவிட்டு விளம்பரங்களை தேடுவார்கள் அவர்களுக்கு மத்தியில் தானால் முயன்ற உதவிகளை ராஜசிம்மனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.