நஸ்ரியாவின் அதிர்ச்சி தரும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமாகி ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் உட்கார்ந்தவர்  மலையாள நடிகை நஸ்ரியா. அதன்பிறகு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு குடும்பவாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் பிரித்விராஜின் தங்கையாக கூடே என்ற படத்தில் நடித்து மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பினார். அதை தொடர்ந்து கணவர் பகத் பாசிலுக்கு ஜோடியாக ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத்  இயக்குகிறார். நஸ்ரியாவை முன்னிலை படுத்தி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ஸ்டைலிஷான தோற்றத்தில் இருக்கும் நஸ்ரியா, வாயில் புகையும், சிகரெட்டுடன் இருப்பது ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.