கஸ்தூரி டுவிட்டரில் மன்னிப்பு கேட்டார்…..

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் ரஜினி, கமல்,மற்றும் மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை பற்றி நக்கலடித்துள்ளார்.அதில் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க போவதாக அறிவிப்பு வெளியானதை “அட என்னப்பா! போருக்கு படை தயார் பண்ணுவார்னு பார்த்தா படம் தயார் பண்ண போறாராம்! அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் என்று பதிவிட்டுள்ளார். அடுத்து கமல், எனக்கு ஒரு அய்யம்,அது என்ன மய்யம்? மையம் வேற,மய்யம் நா வேற போல, அத்த வுடு ம-ய்-ய-ம்  இங்கிலீசுல ma-y-ya-m  தானே? maiam  மை அம்னு  வருது என்று கலாய்த்திருக்கிறார்.அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை வடிக்க சொன்ன சிற்பி அவரு சொந்த அம்மாவை வடிசிட்டாரு போல! கமலை பார்த்து ஊழல் புகாருக்கு ஆதாரம் இருக்கான்னு கேட்ட மங்குனிஸ் இனி கட்சி அலுவலகத்தில் இந்த சிலையை பார்த்தாலே போதுமே! என்று கிண்டல் அடித்திருக்கிறார்.இதனால் அதிமுகவினர் அவரை வசை படி வருகின்றனர். இதை போல் விழுப்புரம்,வேலாம்புதூர் படுகொலை தொடர்பாக ஒரு ஜாதியின் பெயரை குறிப்பிட்டு டுவிட்டரில் போட்டு கடும் எதிர்ப்புகள் வர பின்னர் வார்த்தை தவறுதலாக பதிவு செய்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்டு கொண்டார்.