டியர் நடிகருடன் நடிக்க மறுக்கும் நடிகை !

இரண்டு பெயர்களை கொண்ட நடிகை தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறாராம். இதுவரை இவர் நடித்த 2 படங்களுமே சக்கை போடு போட்டதாம். அதுவே இவருக்கு இப்போது தலைவலியாக மாறி இருக்கிறதாம். அவர் 2 படங்களுமே டியர் நடிகருடன் நடித்தாராம். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக பல்வேறு கிசுகிசுக்கள் உலாவரத் தொடங்கியதாம். நாளடைவில் எங்கு சென்றாலும் நடிகையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டதாம். இதனால் கோபமடைந்த நடிகை அடுத்த 2 வருடங்களுக்கு அந்த நடிகருடன் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம். இது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்.