Cine Gossips
பிரபல நடிகைக்காக தேவதாஸாக அலையும் நடிகர்!
பார்க்க பெரிய அழகி இல்லை ஆனால் அழகான நடிகை அவர். நல்ல நடிப்புத் திறமை இருந்தும் தனிப்பட்ட பிரச்சனைகளால் அவரின் கெரியர் பெரிய அளவுக்கு வரவில்லை. நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை மட்டும் பெற முடியவில்லை. தற்போது நடிகையின் கை நிறைய படங்கள் இருந்தாலும் அவருக்கு வெயிட்டான கதாபாத்திரங்கள் என்று கூறிவிட முடியாது. வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்கும் நிலையில் நடிகை இல்லை. இந்நிலையில் அவர் நகைச்சுவை நடிகராக கோலிவுட் வந்து ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளவருக்கு ஜோடியாக நடிக்கிறார். கெரியர் இப்படிப் போக காதல் வாழ்க்கையில் கண்டபடி பிரச்சனையாக உள்ளது. அவர் நினைப்பில் ஒரு நடிகர் வேறு தேவதாஸாக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.